தெலங்கானா மாநிலத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, அம்மாநில அரசு ஜூன் 9ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, அத்தியாவசிய சேவைகளுக்கு காலை ஆறு மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மீண்டும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் நாளை மறுநாள் (ஜூன்.08) அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளார். அதில், கரோனா தொற்றுப் பரவல், வேளாண்மை, மருத்துவம் மற்றும் சுகாதாரம், மாநிலத்தின் பொருளாதார நிலை ஆகியவை குறித்து முதலமைச்சர் ஆலோசிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், நீர்பாசனத் திட்டங்கள் குறித்தும், பருவமழைக் காலங்களில் நீர் மேலாண்மை குறித்தும் ஆலோசிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'தடுப்பூசி பெற விரைவில் மறு டெண்டர்' அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!