ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாரத ராஷ்டிரிய சமிதி (BRS) கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், அம்மாநிலத்தின் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த நவம்பர் 30ஆம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு ஆளும் கட்சியான பிஆர்எஸ் மற்றும் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான 60க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.
-
తెలంగాణ అసెంబ్లీ ఎన్నికల్లో విజయం సాధించిన అభ్యర్థులకు, మెజారిటీ సాధించి ప్రభుత్వాన్ని ఏర్పాటు చేయబోతున్న కాంగ్రెస్ పార్టీకి అభినందనలు.
— BRS Party (@BRSparty) December 3, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
ఎన్నికల్లో తెలంగాణ ప్రజలు ఇచ్చిన తీర్పును బీఆర్ఎస్ పార్టీ శిరసావహిస్తున్నది. ప్రజాతీర్పును విశ్లేషించుకుని ముందుకు సాగుతుంది..
పోరాడి… pic.twitter.com/cFkJimyzui
">తెలంగాణ అసెంబ్లీ ఎన్నికల్లో విజయం సాధించిన అభ్యర్థులకు, మెజారిటీ సాధించి ప్రభుత్వాన్ని ఏర్పాటు చేయబోతున్న కాంగ్రెస్ పార్టీకి అభినందనలు.
— BRS Party (@BRSparty) December 3, 2023
ఎన్నికల్లో తెలంగాణ ప్రజలు ఇచ్చిన తీర్పును బీఆర్ఎస్ పార్టీ శిరసావహిస్తున్నది. ప్రజాతీర్పును విశ్లేషించుకుని ముందుకు సాగుతుంది..
పోరాడి… pic.twitter.com/cFkJimyzuiతెలంగాణ అసెంబ్లీ ఎన్నికల్లో విజయం సాధించిన అభ్యర్థులకు, మెజారిటీ సాధించి ప్రభుత్వాన్ని ఏర్పాటు చేయబోతున్న కాంగ్రెస్ పార్టీకి అభినందనలు.
— BRS Party (@BRSparty) December 3, 2023
ఎన్నికల్లో తెలంగాణ ప్రజలు ఇచ్చిన తీర్పును బీఆర్ఎస్ పార్టీ శిరసావహిస్తున్నది. ప్రజాతీర్పును విశ్లేషించుకుని ముందుకు సాగుతుంది..
పోరాడి… pic.twitter.com/cFkJimyzui
இது குறித்து அம்மாநில ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளதாவது,“தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகச் சந்திர சேகர் ராவ் நேற்று (நவ.03) ஆளுநருக்குக் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அவரது ராஜினாமாவை ஆளுநர் ஏற்றுக் கொண்டார். புதிய அரசு ஆட்சி அமைக்கும் வரை முதலமைச்சர் பதவியில் தொடரும் படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் அமைந்ததிலிருந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்த சந்திரசேகர் ராவ் தற்போது தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதன் காரணமாக அங்கு முதல் முறையாகத் தேசிய கட்சியான காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ளது.
இதற்குக் காரணம் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளான, மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 500 ரூபாய், 500 ரூபாய்க்கு சமையல் கியாஸ் சிலிண்டர், வீட்டிற்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் முதியோர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் ஓய்வூதியம் உள்ளிட்டவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.
தெலுங்கானாவில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் 64 இடங்களிலும், பிஆர்எஸ் 39 இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும், ஏஐஎம்ஐஎம் 7 இடங்களிலும், சிபிஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
இதையும் படிங்க: மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை! ஆட்சி யாருக்கு?