மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், குளிர் பானம் வாங்குவதற்காக மதியம் 2 மணியளவில், தனது குடும்பத்திற்கு சொந்தமான கடைக்குச் சென்ற ஐந்து வயது சிறுமியை அக்கடையில் அமர்ந்திருந்த 16 வயது சிறுவன், வலுக்கட்டாயமாக கடைக்குள் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
சிறுமியின் உடையில் ரத்தக் கறையை கண்ட தாய் நடந்தது என்னவென்று விசாரித்தபோது சிறுமி தனது குடும்பத்தினரிடம் அச்சம்பவத்தை குறித்து கூறியுள்ளார். பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் குண்டம் காவல் துறையினர், அச்சிறுவனை கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையும் படிங்க: மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு!