டெல்லியில் உள்ள அரசுப் பள்ளியில் 3ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது இன்று (பிப்.8) செய்யப்பட்டார். இவர் 2016ஆம் ஆண்டு முதல் அந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்துவந்தார். நேற்று (பிப்.7) வழக்கம்போல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது, அவர்களில் ஒரு சிறுமியை ஒதுக்குப்புறமாக அழைத்து சென்று பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து சிறுமி வீட்டுக்கு சென்ற பின் மிகவும் சோர்வாக இருந்துள்ளார். இதுகுறித்து, சிறுமியின் தயார் அவரிடம் விசாரிக்கையில், உண்மை தெரியவந்தது. அதனடிப்படையில் சிறுமியின் பெற்றோர் டெல்லி போலீசாரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார், ஆசிரியர் மீது ஐபிசி 376 (பாலியல் வன்புணர்வு, 506 (குற்றவியல் மிரட்டல்), பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இதனிடையே சிறுமிக்கு மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டது. முதல்கட்ட தகவலில் அந்த ஆசிரியர் இதேபோல சில நாட்களுக்கு முன்பும் அதே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும், அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காஷ்மீரில் 5 ஆண்டுகளில் 1,002 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை