ETV Bharat / bharat

ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்! - Durga Stalin Visit Tiruchanoor Sri Padmavathi Temple

திருப்பதி கோயிலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்

ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்
பக்தியும், பதவியும்!
author img

By

Published : Aug 8, 2021, 12:25 PM IST

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், திருச்சானூர் பத்மாவதி தாயாரை வணங்கிவிட்டுதான் ஏழுமலையானை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.

பத்மாவதி தாயாரைச் சந்தித்தால் சகல செல்வங்களும் கிடைக்கும் என இறை பக்தர்கள் நம்பி வருகின்றனர். இந்த நம்பிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மனைவி துர்காவிற்கும் உண்டு போலும். தனது சகோதரிகளுடன் அவர் இன்று (ஆகஸ்ட்8) திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசித்துள்ளார். தரிசனத்திற்கு பின்னர் அவர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் வழங்கப்பட்டது.

துர்கா ஸ்டாலின்
துர்கா ஸ்டாலின்

ஏழுமலையான் தரிசனம்

பத்மாவதி தாயாரை வணங்கிய பின்னர் அங்கிருந்து திருப்பதி கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டார் துர்கா ஸ்டாலின். அவருடன் குடும்பத்தினர் ஏழுமலையானின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

விஐபி பிரேக் தரிசனத்தில் திருப்பதி கோயிலில் தரிசனம் செய்த முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவிக்கு, தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள்,சேஷ வஸ்திரம் ஆகியவை வழங்கப்பட்டன. இறை வழிப்பாட்டில் அதிக நாட்டம் கொண்ட துர்கா ஸ்டாலினுக்கு திருப்பதி ஏழுமையான் மிகவும் விருப்பமானக் கடவுளாம்.

ஏழுமலையானை தரிசித்த துர்கா ஸ்டாலின்!

பக்தியும், பதவியும்!

ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தருணத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்த, துர்கா ஸ்டாலின் கண் கலங்கிய காட்சி, அரசியல் கடந்து பலரையும் நெகிழச் செய்தது. அப்போது துர்கா ஸ்டாலினின் பக்திதான், ஸ்டாலின் முதலமைச்சராகக் காரணம் என ஒரு தரப்பினர் பரவலாக பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஸ்டாலினுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு' - துர்கா ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.