ETV Bharat / bharat

மணமகன் கழுத்தில் அணிந்திருந்த பண மாலையை திருடிய ஸ்விகி ஊழியர்கள் - ரூ10000 கொள்ளை இருவர் கைது

டெல்லியில் திருமண ஊர்வலத்தின்போது மணமகன் கழுத்தில் அணிந்திருந்த பண மாலையை திருடிய, ஸ்விகி நிறுவன ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்விகி ஊழியர்கள் கைது
ஸ்விகி ஊழியர்கள் கைது
author img

By

Published : Feb 21, 2023, 8:23 PM IST

டெல்லி: ஜகத்புரி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி திருமண ஊர்வலம் நடைபெற்றது. அப்போது கூட்டத்துக்குள் புகுந்த நபர்கள் இருவர், மணமகன் கழுத்தில் அணிந்திருந்த ரூ.10,000 மதிப்புள்ள பண மாலையை திருடிவிட்டு தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அனு குப்தா என்பவரது திருமண ஊர்வலம் ஸ்டார் பிளேஸ் நோக்கி சென்று கொண்டிருந்தது. அவரது கழுத்தில் ரூ.500 தாள்களுடன், ரூ.10,000 மதிப்புள்ள மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.

இதை நோட்டமிட்ட இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பணமாலையை பறித்துவிட்டு தப்பினர். சுமார் 80 சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையர்களை போலீசார் சுற்றிவளைத்தனர். அதன்படி ஜஸ்மீத் சிங் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.5,500-ஐ கைப்பற்றினர்.

அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், ராஜீவ் மாடோவை கைது செய்த போலீசார் ரூ.4,500-ஐ பறிமுதல் செய்தனர். இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்விகி நிறுவனத்தில் டெலிவரி ஊழியர்களாக பணியாற்றியது தெரியவந்தது. போதைப் பழக்கத்துக்கு அடிமையான இருவரும், பணத்தை திருடியதும் கண்டறியப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: Garib Rath Express: டெல்லி - சென்னை விரைவு ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.