கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணியான எல்.டி.எஃப். கூட்டணி 99 இடங்களை வென்று மீண்டும் ஆட்சியமைக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், மாநில முதலமைச்சராக பினராயி விஜயன் தொடர்ந்து இரண்டாவது முறை பதவியேற்கவுள்ளார்.
பதவியேற்பு விழா குறித்த அறிவிப்பை இடதுசாரி கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான விஜயராகவன் வெளியிட்டுள்ளார். அதில், வரும் மே 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளதாகவும், அமைச்சரவையில் 21 பேருக்கு இடமளிக்கப்பட்டுள்ளதாகவும் தெவித்துள்ளார்.
அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 12 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் நான்கு, கேரள காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கோவிட்-19 பரவல் காரணமாக விழா மிகவும் எளிமையான முறையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’மாட்டு மூத்திரம் குடிக்கிறேன், எனக்கு கரோனா வராது’ - பாஜக எம்பி பிரக்யா சிங்