ETV Bharat / bharat

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 17,407பேருக்கு பாதிப்பு! - மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம்

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 17 ஆயிரத்து 407 நபர்களுக்கு கரோனா பெருந்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 89 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட்-19 நிலவரம்: ஒரே நாளில் 17,407பேருக்கு பாதிப்பு

author img

By

Published : Mar 4, 2021, 12:05 PM IST

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 17 ஆயிரத்து 407 நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 89 பேர் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தனர்.

கோவிட் - 19 நிலவரம்

இந்தியாவில், இதுவரை ஒரு கோடியே 11 லட்சத்து 56 ஆயிரத்து 923 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 413 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 435 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இன்று (பிப். 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் நேற்றுவரை (மார்ச். 3) 21 கோடியே 91 லட்சத்து 78 ஆயிரத்து 908 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் நேற்று (மார்ச் 3) மட்டும் ஏழு லட்சத்து 75ஆயிரத்து 631 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை ஒரு கோடியே 66 லட்சத்து 16 ஆயிரத்து 48க்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க...உருமாறிய கரோனாவுக்கு எதிராக செயலாற்றும் கோவாக்சின்.. மூன்றாம் கட்ட ஆய்வு முடிவுகள் கூறுவது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.