டெல்லி: மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த 45 நாட்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சட்டங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் இன்று (ஜன. 12) மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனை விசாரித்த நீதிபதிகள் அமர்வு புதிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும், மறு உத்தரவு வரும்வரை வேளாண் திருத்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வேளாண் திருத்தச் சட்டங்கள் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண உச்ச நீதிமன்ற மேற்பார்வையில், 4 பேர் கொண்ட குழு அமைத்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. இதற்கு மத்திய அரசும் வரவேற்பு தெரிவித்தது.