டெல்லி : முன்னதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின்போது, “இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை” என்ற குற்றச்சாட்டை மனுதாரர் முன்வைத்தார்.
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் கண்காணிப்பில் நடைபெற வேண்டும்.
தமிழ்நாட்டில் பாரம்பரியமிக்க பழமையான பல்வேறு கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. தவறான நிர்வாகத்தால் கோயில்கள் அழியும் நிலையில் உள்ளன. பல்வேறு கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்கப்படவில்லை. இந்து அறநிலையத் துறை அலுவலர்களே உள்ளன. இதனால் அறங்காவலர் குழு அமைக்க உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்து தர்ம பரிஷத் தரப்பில் தமிழ்நாடு அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுமுறைகால சிறப்பு மனு அளிக்கப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய தரப்பு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் நரேந்திர குமார் வர்மா, ஜெய சுகின் ஆகியோர் ஆஜராகி அறங்காவலர் நியமனத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என வாதாடினார்.
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. முன்னதாக இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழ்நாடு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், அறங்காவலர்களை தேர்வு செய்வதற்கான மாவட்டக் குழுக்களின் பதவிக் காலம் 2 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதவிக் காலம் முடிந்த 6 மாவட்டங்களில் இந்த குழுக்கள் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளன” என விளக்கம் அளித்தார்.
இந்து சமய அறநிலையத் துறையில் உள்ள அனைத்து இந்து கோயில்களிலும் உள்ள அறங்காவலர் குழுவில் ஒய்வுபெற்ற நீதிபதி, சமூக ஆர்வலர், பக்தர், பட்டியலின நபர் மற்றும் பெண் ஒருவர் இடம்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கோயில்கள் இடிப்பு... பாரபட்சம் காட்டாதீங்க! - இந்து அறநிலையத் துறைக்கு கண்டனம்