கோழிக்கோடு(கேரளா) : இப்படியும் ஒரு மனிதரா? என்று அனைவரும் வியக்கும் வண்ணம் கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவரை நாசா விஞ்ஞானிகள் அழைத்து அப்படி என்ன அவர் உடம்பில் சக்தி இருக்கிறது என்று ஆய்வு மேற்கொண்டனர். ஆம் அவர் அதிசய மனிதரே. அவர் பெயர் சுங்கேசர் ஹிரா ரத்தன் மானக்.
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் வாழ்ந்து வந்தார். தொழிலதிபரான மானக், உணவு உண்ணாமல், வெறும் சூரிய ஆற்றல், தண்ணீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்து வந்தார்.
1962ஆம் ஆண்டு புதுச்சேரியில் உள்ள அரவிந்தோ ஆசிரமத்திற்குச் சென்றபோது சூரிய ஆற்றல் பற்றி தெரிந்து கொண்டு, ஆர்வமுடன் அதை முயற்சி செய்து தியானம் செய்தார்.
1992ஆம் ஆண்டு முதல் சூரிய வழிபாடைத் தீவிரமாக மேற்கொண்டார். காலை சூரியன் உதயமாகி ஒரு மணி நேரத்திற்குள்ளும், மாலை சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும் சூரியனை வெறும் கண்ணால் பார்த்து வழிபட்டார். ஆரம்பத்தில் சூரியனைப் பார்ப்பதற்கு அவருக்கு கடினமாக இருந்தபோதிலும், பின்னாளில் ஏழு மாதங்களுக்குள் அது அரை மணி நேரமாக பார்க்கப்பழக்கப்படுத்திக்கொண்டார்.
ஒன்பது மாதங்களுக்குள் சூரிய ஆற்றலைப் பெறமுடிந்தது என்று மானக் கூறினார். மேலும், இதன் மூலம் ஒருவர் பசியை இழந்து உணவு உண்பதை விட்டுவிடுவார் என்றும் அவர் கூறினார்.
சூரியனிடமிருந்து ஆற்றல் பெறும்போது, அது ஒரு 'சிப்' போல் செயல்படுகிறது. சூரிய ஆற்றலுடன் உணவின்றி நீர் மட்டுமே குடிப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழ முடியும் என்று மானக் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த ஆற்றல் குறித்து பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. நாசா விஞ்ஞானிகளும் இவரை அழைத்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். பல்வேறு மேடைகளில் இவரின் ஆற்றல் குறித்து பேசியுள்ளார். நூல்கள் வெளியிட்டுள்ளார். ஐம்பது நாடுகளுக்குச் சென்றுள்ளார். இந்தநிலையில், சுங்கேசர் ஹிரா ரத்தன் மானக், தனது 84ஆவது வயதில் கோழிக்கோடு சகோரத்துக்குளத்தில் உள்ள தனது வீட்டில் நேற்று (மார்ச் 13) உயிரிழந்துள்ளார்.
இதையும் படிங்க: மாரியம்மனுக்கு வெயிலில் பால்குடம் எடுத்த பக்தர்கள்... பாதத்தில் நீர் ஊற்றி வெப்பம் தணித்த இஸ்லாமியர்கள்... இது தான் தமிழ்நாடு!