ETV Bharat / bharat

NRCB அறிக்கை - தற்கொலைகளில் தமிழ்நாடு 2ஆம் இடம் - 2020 தமிழ்நாட்டில் தற்கொலைகள்

இந்தியா அளிவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது.

Suicide rate
Suicide rate
author img

By

Published : Oct 30, 2021, 5:12 PM IST

2020ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த தற்கொலை தொடர்பான புள்ளிவிவரங்களை தேசிய குற்ற ஆவணக் காப்பகம்(NRCB-National Crime Records Bureau) வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்தாண்டு ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 52 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 123ஆக இருந்த நிலையில், இந்தாண்டு எண்ணிக்கையானது சுமார் 14 ஆயிரம் அதிகரித்துள்ளது. நாள்தோறும் சராசரியாக 418 பேர் தற்கொலை செய்துள்ளனர்.

தமிழ்நாடு மீண்டும் இரண்டாவது இடம்

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 19 ஆயிரத்து 909 பேர் தற்கொலை செய்துள்ளனர். அதற்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் 16 ஆயிரத்து 883 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 14 ஆயிரத்து 578 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

2019ஆம் ஆண்டைப் போலவே இந்திய அளவில் அதிக தற்கொலைகள் நடைபெறும் மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடத்தில் உள்ளது. நாட்டின் மொத்த தற்கொலைகளில் 11 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் நடைபெற்றுள்ளது.

தற்கொலை தீர்வு அல்ல
தற்கொலை தீர்வு அல்ல

மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 3.1 விழுக்காடு தற்கொலைகள்தான் நடைபெற்றுள்ளது.

பாலின பேத அடிப்படையில் மொத்தத் தற்கொலைகளில் ஆண்கள் எண்ணிக்கை 70.9 விழுக்காடும், பெண்களின் எண்ணிக்கை 29.1 விழுக்காடுமாக உள்ளது. தற்கொலைக்கான காரணங்களில் குடும்ப பிரச்னை 33.6 விழுக்காடாகா உள்ளது.

இதையும் படிங்க: தேசிய அளவிலான நிமோனியா தடுப்பூசித் திட்டம் தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.