தனது பேச்சில் ஒவ்வொரு முறையும் தனது மனைவி பெயரை சொல்லி, பத்திரமாக பிள்ளைகளை பார்த்துக்கொள் என்று கூறி கண்ணீருடன் விடைபெற்றார் ஜெகதீஷ்.
தெலங்கானா மாநிலம் வனஸ்தலிபுரத்தில் ஜெகதீஷ் என்பவர் தனது மனைவி விஜி, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். பொழுதுபோக்கிற்காக ஆன்லைன் விளையாட்டை தொடங்கியவர், நாளடைவில் அந்த விளையாட்டிற்கு அடிமையானார். ஆன்லைன் விளையாட்டின் மூலம் 12 லட்சம் ரூபாய் சம்பாதித்து கடன் அடைத்தார். ஆனால், அதே விளையாட்டு மூலம் தோற்று தன்னிடம் இருந்த மொத்த பணத்தையும் இழந்தார்.
பணத்தை இழந்த விரக்தியில் இருந்த ஜெகதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் வீடியோ மூலம் பேசிய ஜெகதீஷ், "ஐ லவ் யூ விஜி. இந்த வீடியோ நீ பாக்குறப்போ நான் உயிரோட இருக்கமாட்டேன். நா உன்னை ரொம்ப லவ் பன்றேன். விஜி என்னை மன்னிச்சுடு, நம்ம பிள்ளைகளை நல்லா படிக்க வை. ஆன்லைன் விளையாட்டுல எல்லா பணத்தையும் இழந்துவிட்டேன்.
அந்த தோல்வியை என்னால் தாங்க முடியலை. விஜி உனக்காக நான் எதுவும் செய்யவில்லை. குழந்தைகளை பத்திரமா பார்த்துக்க. அப்பா என்னை மன்னிச்சுடுங்கப்பா" என கண்ணீர் மல்க பேசியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், இறந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக உஸ்மானியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இலங்கையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை; கொழும்பு சென்றார் அஜித் தோவல்