கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள அலுவாவில் இன்று (செப்-2) வேகமாக சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்தின் அவசர வழி கதவு வழியாக எல்கேஜி குழந்தை தவறி விழுந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டனர். அந்த குழந்தை சிறுகாயங்களுடன் உயிர் தப்பித்தது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இதற்கு ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்று குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க:கேரளாவில் திருமண உறவுகள் 'Use and Throw' கலாசாரம் போல் உள்ளது - வேதனை தெரிவித்த உயர் நீதிமன்றம்