கோண்டா: உத்தரப்பிரதேச மாநிலம், மங்காபூர் கோட்வாலி பகுதியில் உள்ள ஐடிஐ வளாகம் அருகே, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவன் ஒருவனை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். மாணவனின் மேலாடையைக் கழற்றி, கட்டைகள் மற்றும் பெல்ட்டால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
ரத்தம் வடியும் நிலையில், தன்னை விட்டுவிடும்படி மாணவன் கெஞ்சியபோதும், இரக்கமின்றி கொடூரமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதை வீடியோவாகப் பதிவு செய்தும் வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இந்தச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: அரும்பாக்கத்தில் திருடப்பட்ட நகைகள் காவல் ஆய்வாளர் வீட்டில் பறிமுதல்