ETV Bharat / bharat

மேற்கு வங்கத்தில் பயங்கரவாத செயல்கள்... போபாலில் 2 பேர் கைது....

மேற்கு வங்க மாநிலத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் 2 பேர் போபாலில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டனர்.

போபாலில் இரண்டு தீவிரவாதிகள் சிறப்பு அதிரடிப்படையால் கைது

author img

By

Published : Sep 30, 2022, 9:00 PM IST

ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் போபாலில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 2 இளைஞர்களை மேற்கு வங்க காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை (எஸ்டிஎஃப்) கைது செய்துள்ளது. முன்னதாக ஹவுராவின் பாங்க்ரா மற்றும் தெற்கு பர்கானாஸில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மத்தியப் பிரதேசத்தின் போபாலை சேர்ந்த 2 பேர் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பது தெரியவந்தது. இதனிடையே உஷாரான 2 பேரும் ஹவுராவில் இருந்து போபாலுக்கு தப்பியோடினர்.

இதனையறிந்த சிறப்புப்படை போலீசார் நேரடியாக போபாலுக்கு விரைந்து அவர்கள் கைது செய்தது. முதல்கட்ட தகவலில் அவர்கள் இருவரும் இலியாஸ் இப்ராஹிம், அக்ரமுல் ஹக் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 12 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:ஆர்எஸ்எஸ் பேரணி... அக்.2ஆம் தேதி வேண்டாம்... நவ.6ஆம் தேதி நடத்துங்கள்... உயர் நீதிமன்றம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.