ETV Bharat / bharat

நான் ரெடி! மிஸ்டர் பழனிசாமி நீங்க ரெடியா? - சவாலை ஏற்ற ஸ்டாலின்! - சவாலை ஏற்ற ஸ்டாலின்

சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழல் வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் விதித்த தடையை நீக்க நடவடிக்கை எடுத்து விட்டு, ஊழல் புகார்கள் குறித்து விவாதிக்க வாருங்கள் என்றும், விவாதிக்க தான் தயார் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பழனிசாமியின் சவாலை ஏற்றுள்ளார்.

stalin
stalin
author img

By

Published : Jan 7, 2021, 2:12 PM IST

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவிலேயே ஊழலுக்காக சிறைக்கு போன முதலமைச்சரை கொண்ட கட்சி, என்றும் மாறா ஊழல் கறை படிந்த கட்சி அதிமுக தான். அந்த கட்சியின் முதலமைச்சரான பழனிசாமி, அரசு கஜானாவை வைத்து போலி, பொய், புளுகு பிரச்சாரம் செய்ய அவருக்கு இருப்பது இன்னும் நான்கு மாதம்தான். அதனால் தான், என்ன பேசுகிறோம் என்பது தெரியாமல் புலம்பி கொண்டிருக்கிறார்.

தனது துறையிலேயே சம்பந்திக்கு ரூ.6,000 கோடி ரூபாய் டெண்டர் கொடுத்ததுடன், ’என் உறவினர் டெண்டர் எடுப்பதில் என்ன தவறு?' என்று உயர் நீதிமன்றத்திலேயே வாதிட்டார். 'ஆன்லைன் டெண்டரில் என் உறவினர் டெண்டர் போட்டால் எனக்கு எப்படித் தெரியும்?' என்று இப்போது அந்தர் பல்டி அடிக்கிறார்.

மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதில் ஊழல், ஆவின் பாலில் ஊழல், ரேஷன் அரிசியில் ஊழல், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா டெண்டர் ஊழல், உறவினர்களுக்கு டெண்டர் வழங்கியதில் ஊழல், மின்சாரக் கொள்முதலில் ஊழல், நிலக்கரி இறக்குமதியில் ஊழல், பாரத்நெட் டெண்டர் ஊழல், கரோனா தடுப்புக் கருவிகள், மருந்துகள் வாங்குவதில் ஊழல், குட்கா ஊழல், வாக்கி டாக்கி ஊழல், எல்.இ.டி விளக்கு ஊழல் என முதலமைச்சர் பழனிசாமி மீதும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் உள்ள ஊழல் நாற்றம் உலகம் முழுவதும் வீசிக் கொண்டிருக்கிறது.

திமுகவினர் மீது நில அபகரிப்புப் புகார் என்று ஒரு பொய்யை திரும்பத் திரும்பப் பேசி வருகிறார் பழனிசாமி. இந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சிதானே இருந்தது? எத்தனை திமுகவினர் மீது நில அபகரிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. நேருக்கு நேர் ஊழல் பற்றி விவாதிக்கத் தயாரா? என்று முதலமைச்சர் நேற்று சவால் விடுத்திருக்கிறார். அந்த சவாலை நான் ஏற்கத் தயார்.

அதற்கு முன் பழனிசாமி, நாளைக்கே உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து ’சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த நெடுஞ்சாலைத்துறை ஊழல் மீதான சிபிஐ விசாரணைக்கு விதித்த தடையை உடனே நீக்குங்கள். நான் வழக்கை சந்திக்கத் தயார்’ என்று உத்தரவு வாங்க வேண்டும். ’எதிர்க்கட்சி தலைவர், அமைச்சர்கள் மீது கொடுத்துள்ள ஊழல் புகார்களை விசாரிக்க அனுமதி வழங்குக’ என்று தீர்மானத்தை நிறைவேற்றி ஆளுநரிடம் உடனடியாக ஒப்படையுங்கள்.

அடுத்த நிமிடமே விவாதத்திற்கு தேதி குறியுங்கள். எந்த இடம் என்று சொல்லுங்கள். அந்த இடத்திற்கு நான் மட்டும் வருகிறேன். உங்கள் தரப்பில் நீங்களும் உங்கள் அமைச்சரவை சகாக்கள் அனைவரும் வாருங்கள். நான்காண்டு கால ஆட்சியில் எப்படிக் கொள்ளையடித்து சுரண்டி உள்ளீர்கள், என்ன கமிஷன் வாங்கி, கலெக்‌ஷன், கரெப்ஷன் செய்துள்ளீர்கள் என்பதை கிழித்து தோரணமாக தொங்க விடுகிறேன். நான் ரெடி. முதலமைச்சர் மிஸ்டர் பழனிசாமி நீங்கள் ரெடியா?” என்று கேட்டுள்ளார்.

இதையும் படிங்க: வன்னியர் சமுதாய இடஒதுக்கீடு தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.