ETV Bharat / bharat

Exclusive: தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டிய இலங்கைத் தமிழ் மீனவர்கள்!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்களை, இலங்கைத் தமிழ் மீனவர்கள் விரட்டிப் பிடிக்கும் பிரத்யேக வீடியோ காட்சிகள் நமக்கு கிடைத்துள்ளன.

தமிழ் மீனவர்களை விரட்டிய இலங்கை மீனவர்கள்

author img

By

Published : Feb 1, 2022, 7:38 PM IST

இலங்கையில் கடந்த வியாழக்கிழமை (ஜன 27) யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்ற இலங்கைத் தமிழ் மீனவர்கள் இருவர் காணாமல் போயிருந்தனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் (ஜன 31) அவர்கள் சடலமாக ஆழியவளைப் பகுதியில் மீட்கப்பட்டனர்.

இறந்தவர்களது உடல்களில் காயம் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், தமிழ்நாடு மீனவர்களால் தான் இருவர் இறந்ததாகவும், தமிழ்நாடு மீனவர்கள் அத்துமீறி தங்களின் படகுகளை இலங்கை மீனவர்கள் மீது மோதச்செய்வதாகவும்கூறி, குற்றஞ்சாட்டி உயிரிழந்தோரின் உறவினர்களும் அவர்களது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் உயிரைக் குடிக்கும் இந்தியப் படகை தடுத்து நிறுத்து என்றும்; மீனவர் வாழ்க்கை யார் கையில் உள்ளது என்பது போன்றும் பல்வேறு முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கைத் தமிழ் மீனவர்கள்

இந்நிலையில் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்து மீன்பிடித்த இழுவைப்படகு ஒன்றை மாதகல் கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

அதேவேளை, பருத்தித்துறை கடற்பரப்பில் நுழைந்த இந்திய இழுவைப்படகு ஒன்றை பருத்தித்துறை மீனவர்கள் வளைத்துப் பிடித்தனர்.

இதில், இலங்கைத் தமிழ் மீனவர்கள், தமிழ்நாட்டு மீனவர்களின் படகை விரட்டிச் சென்றனர். இந்த காட்சிகளை படகில் சென்ற மீனவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது நமக்கு பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டு மீனவர்களை விரட்டிய இலங்கைத் தமிழ் மீனவர்கள்

அந்தப் படகை கரைக்கு கொண்டு வந்து கொண்டிருந்தபோது வழிமறித்த கடற்படையினர், இந்திய இழுவைப்படகை கைப்பற்றி, மயிலிட்டிக்கு கொண்டு சென்றனர்.

கைப்பற்றப்பட்ட இரண்டு இழுவைப்படகுகளுடம், 21 மீனவர்களும் தற்போது மயிலிட்டி கடற்படை முகாமில் உள்ளனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிடிபட்ட 21 தமிழ்நாட்டு மீனவர்களையும் மீட்டுத்தரக்கோரி, நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

இதையும் படிங்க: ராகு கேது சிலைகளை உடைத்த டெல்லி இளைஞர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.