ETV Bharat / bharat

ஸ்புட்னிக் வி தடுப்பூசி செப்டம்பர் முதல் முழு அளவில் உற்பத்தி - ஆர்டிஐஎஃப் தகவல்

செப்டம்பர் முதல் இந்தியாவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி முழு அளவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Breaking News
author img

By

Published : Jul 31, 2021, 7:30 PM IST

டெல்லி: இந்தியாவிற்கு ஸ்புட்னிக் வி டோஸ் வருகை தாமதமாகும் என்ற தகவல்கள் தவறானவை என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி சனிக்கிழமை (ஜூலை 31) தெரிவித்தது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் சீரம் இன்ஸ்டிட்யூட் தயாரித்துள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவாக்சின்’ தடுப்பூசி, ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக் வி’ தடுப்பூசி ஆகியவற்றிற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் ஜனவரி 16 முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்றுவருகிறது. முதற்கட்டமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கும், அதைத்தொடர்ந்து பொது மக்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவருகிறது. மூன்றாம் அலையை எதிர்கொள்ளும் வகையில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அந்தவரிசையில் முதல் டோஸ் தடுப்பூசியை பொது மக்கள் அனைவரும் எடுத்துக் கொள்ளுவதை உறுதி செய்யும் முனைப்பிலும் அந்தந்த மாநில அரசுகள் ஈடுபட்டுவருகின்றன.

இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி, செப்டம்பர் முதல் இந்தியாவில் முழு அளவில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பான தகவலை ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி சனிக்கிழமை(ஜூலை 31) தெரிவித்தது.

இந்தியாவில் உள்ள ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியுடன் (ஆர்டிஐஎஃப்) ஒப்பந்தம் மேற்கொண்ட பல அமைப்புகள் ஏற்கனவே ரஷ்யாவின் கமாலேயா மையத்தில் சரிபார்ப்புக்கு உட்பட்ட இரண்டாவது தொகுப்புகளை உற்பத்தி செய்துவருகின்றனர்.

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, க்ளான்ட் பார்மா, ஹீடெரோ பயோஃபார்மா, பனேசியா பயோடெக் போன்ற நிறுவனங்களுடன் இந்தியா ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முக்கிய உற்பத்தி மையமாக இந்தியா மாறும் என்று ரஷ்ய நேரடி முதலீட்டு நிதி எதிர்பார்க்கிறது.

அதேபோன்று ஸ்டெலிஸ் பயோஃபார்மா, விர்ச்சோ பயோடெக் மற்றும் மோரேபென் ஆய்வகங்கள் தடுப்பூசியை உற்பத்தி செய்யும் பணிகள் ஈடுபட்டுள்ளன.

இரண்டாவது தொகுதிகள் தடுப்பூசி தயாரிப்பதில் தாமதம் குறித்து ஆர்டிஐஎஃப் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் ஸ்புட்னிக் வி இரண்டாம் தொகுதி தடுப்பூசி உற்பத்தி தாமதங்கள் குறித்து வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை, தவறானவை.

இந்தியாவிலுள்ள பங்குதாரர்களுக்கு தடுப்பூசி உற்பத்தி தொழில்நுட்பத்தை மாற்றும் நடைமுறை செயல்முறையில் உள்ளது. ரஷ்ய மற்றும் இந்திய தடுப்பூசி உற்பத்தி நிபுணர்களிடையே ஒரு தீவிர பரிமாற்றம் உள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட்டை இந்தியாவிற்கு வழங்குவதைத் துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கோவிட் -19 பாதிப்பாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, இந்தியாவிற்கு ஸ்புட்னிக் வி டோஸ் வருகை தாமதமாகி வருவதாகவும், ஆகஸ்ட் இறுதிக்குள் நிலைமை குறையலாம் என்றும் டாக்டர் ரெட்டி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.