ETV Bharat / bharat

Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு அமைச்சகத்துக்கு கூடுதலாக ரூ.700 கோடி நிதி! - மத்திய பட்ஜெட் விளையாட்டு அமைச்சகம்

ஆசிய விளையாட்டுத் தொடர், 2024ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட உலகளாவிய தொடர்களை கருத்தில்கொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு அமைச்சகத்திற்கு மத்திய பட்ஜெட்டில் 700 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்
author img

By

Published : Feb 1, 2023, 5:55 PM IST

டெல்லி: 2023- 24ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட் இது என்பதால் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகள் இடம் பெற்றன.

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படுவதாலும் அதனால் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்பதாலும் நடப்பு நிதி பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு முத்தாய்ப்பாக விளங்கும் அறிவிப்புகள் வெளியாகின.

2024ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக் தொடர், ஆசிய விளையாட்டுத் தொடர் உள்ளிட்ட உலகளவிலான தொடர்களில் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். சர்வதேச விளையாட்டுத் தொடர்களில் கலந்து கொள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் கூடுதல் நிதி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் முதன்மை விளையாட்டு தொடரான கேலோ இந்தியா போட்டிக்கு, ஆயிரத்து 45 கோடி ரூபாய் மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த பட்ஜெட்டில் 606 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், நடப்பு நிதி ஆண்டில் 439 கோடி ரூபாய் கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆசிய சாம்பியன்ஷிப், 2024 பாரீஸ் ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச விளையாட்டுத் தொடர்களில் கலந்து கொள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் நடப்பு நிதி ஆண்டில் கூடுதலாக 439 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்திய விளையாட்டு ஆணையமான சாய், நடப்பாண்டில் வழிநடத்த உள்ள தேசிய விளையாட்டு முகாம்கள், உள்கட்டமைப்பு, விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல், பயிற்சியாளர்கள் தேர்வு மற்றும் ஊதியம் உள்ளிட்ட பணிகளுக்காக 785 கோடியே 52 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: Union Budget 2023: மத்திய பட்ஜெட்டில் பெண்களுக்கு சிறப்புத் திட்டம் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.