புதுச்சேரி : சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதை தொடர்ந்து என். ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றார். இதனையடுத்து 15- வது சட்டப்பேரவை முதல் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது. அன்றைய தினம் சட்டப்பேரவைத் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.
இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் புதுச்சேரி பாஜக பொதுச் செயலாளர் ஆர். செல்வம் பேரவை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். புதுச்சேரி பாஜக அலுவலகத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் திங்கள்கிழமை காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆர். செல்வம் ஒருமனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனையடுத்து சட்டப்பேரவை செயலாளர் முனுசாமியிடம், பேரவைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை செல்வம் தாக்கல் செய்தார். இதனை முதல்வர் என். ரங்கசாமி முன்மொழிந்தார். ஏ.நமச்சிவாயம் வழிமொழிந்தார்.