டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2ஆவது அமர்வு நேற்று முன்தினம் (மார்ச் 14) தொடங்கியது. ஏப்ரல் 8ஆம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமர்வின் 3ஆவது நாள் இன்று (மார்ச் 16) தொடங்கியது. இதில், இந்திய ஜனநாயகத்தில், சமூக ஊடகங்களின் செல்வாக்கு குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஜனநாயகத்திற்கு ஆபத்து
இதுதொடர்பாக மக்களவையின் பூஜ்ய நேரத்தில் 'அல் ஜசீரா' மற்றும் 'தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்' ஆகியவற்றில் வெளியிடப்பட்ட அறிக்கையை குறிப்பிட்டு பேசிய அவர், “உலகளாவிய நிறுவனமான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை, அரசியல் பிரமூகர்கள், தங்களது கட்சியினை மேம்படுத்துவதற்காக அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
அரசுக்கு எதிர்க்குரல் கொடுப்பவர்களை முடக்கியும், தேர்தல் விதிமுறைகளை மீறியும், பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. மேலும் சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் அந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இத்தகைய செயல், ஜனநாயகத்திற்கு ஆபத்தாக முடியும். தவறான விளம்பரங்களை பதிவிட்டு, இளம் வயது முதல் முதியவர்கள் வரை, வெறுப்பூட்டும் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் கொண்டுசெல்கிறது. இதனால், பெருமளவில் லாபம் ஈட்டி வருகிறது. ஆகையால், இந்திய ஜனநாயகத்தில், சமூக ஊடகங்களின் செல்வாக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து ராஜினாமா