நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா பரவல் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், கேரளாவில் எர்ணாகுளம் மாவட்ட சிறைச்சாலையில் 60 கைதிகளுக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களை கண்காணிக்கும் வகையில் அனைவரும் ஒரே பிளாக்குக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதில், தீவிரமான அறிகுறிகள் உள்ள கைதிகள் அவசர சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். 65 சிறை அலுவலர்களில் இரண்டு பேருக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.