டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 வயதான ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தனி வார்டில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.
அவர் அண்மையில் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை டெல்லியில் 6 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் முதல் குரங்கம்மை பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.