ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ஜெய்ஷ்-இ-முகமது என்னும் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கவாதிகள் உடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்களும், வெடிமருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து குல்காம் போலீசார் தரப்பில், மிர்ஹாமா மற்றும் தம்ஹால் ஹன்ஜிபோரா பகுதிகளில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் புழக்கம் இருப்பதாக போலீசாருக்கும், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் படையினருக்கும் தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
அந்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடங்களுக்கு விரைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டோம். அந்த சோதனையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புடன் தொடர்புடைய 6 பேரை கைது செய்தோம். அவர்களிடம் இருந்து 1 பிஸ்டல், 1 பிஸ்டல் மேகசின், 18 பிஸ்டல் ரவுண்டுகள், 1 கையெறி குண்டு, 4 UBGL ரக குண்டுகள், 30 ஏகே 47 ரவுண்டுகள், 446 M4 ரவுண்டுகள், 8 M4 மேகசின், 1 ஏகே 47 மேகசின் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல 2 மோட்டார் குண்டுகள், ஒரு வயர்லெஸ் செட் வெடிகுண்டு, 4 வாக்கி டாக்கீகள் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், இந்த 6 பேரும் பயங்கரவாதிகளுடன் சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பில் இருந்துவந்ததும், அவர்களுக்கு தேவைப்படும்போது ஆயுதங்களை கொடுக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, அவர்கள் குல்காம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கையெறி குண்டு தாக்குதல்கள், பொதுமக்களை அச்சுறுத்துதல், சிறுபான்மையின் மீது துப்பாக்கிச் சூடு நடத்துதல் உள்ளிட்ட திட்டங்களை தீட்டிவந்ததும் தெரியவந்துள்ளது. இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரும் அசம்பாதிவதம் முன்கூட்டியே முறியடிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் சிறந்த ஏற்றுமதி நாடாக அமெரிக்கா உள்ளது - பியூஷ் கோயல்