கொல்கத்தா: மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள கோசாபா பகுதியில் நேற்று இரவு குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், ஆறு பேர் பலத்த காயம் அடைந்துள்ள நிலையில், இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்கள் அனைவரும் பாஜகவைச் சேர்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெடிகுண்டு வைக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்திற்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கோசாபாவின் திரிணாமூல் காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 68 மில்லியன் டன் உணவுப் பொருள்கள் வீண் - ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்