ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக ஆறு சிறுமிகள் இருப்பதாக ரயில்வே பாதுகாப்புப் படையிருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில், தேடுதல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் 6 சிறுமிகளை மீட்டனர்.
முதல்கட்ட விசாரணையில், சிறுமிகள் வீட்டு வேலைகளுக்காக டெல்லிக்கு அனுப்பப்படவிருந்தனர். அவர்களுடன் பாதுகாவலர் யாரும் இல்லை என்பது தெரியவந்தது.
அதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினர் சிறுமிகள் ஆறு பேரையும் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சிறுமிகளின் முகவரி குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. தற்போது சிறுமிகள் குழந்தைகள் நல மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உ.பி.யில் பட்டியலின சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு!