அஸ்ஸாம் - மிசோரம் எல்லைப்பகுதியில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக, 6 அஸ்ஸாம் காவல் மற்றும் துணை ராணுவப்படையினர் உயிரிழந்துள்ளதாக அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
கெளகாத்தி (அஸ்ஸாம்): அஸ்ஸாம் - மிசோரம் எல்லையில் லைலாப்பூரில் நடந்த வன்முறை மோதலின்போது, அஸ்ஸாம் காவல் துறையினரும் துணை ராணுவப்படையைச் சார்ந்த சிலரும் என மொத்தம் 6 பேர் உயிரிழந்தனர்.
அஸ்ஸாம் காவல்துறை இதை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்த சம்பவத்தின்போது பொதுமக்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல் துறையினரின் மறைவுக்கு அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மாநில அரசியலமைப்பு எல்லையைப் பாதுகாக்க வீரர்கள், தங்கள் உயிரைத் தியாகம் செய்ததாக சர்மா கூறினார்.
லைலாப்பூரில் மாநிலங்களுக்கு இடையேயான எல்லையில் இரு மாநில மக்களிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்காவின் தலையீட்டை அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்பே கோரியிருந்தார்.
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக, சர்மா மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்காவிடம் பேசினார்.
வன்முறை நடந்த அஸ்ஸாம் - மிசோரம் எல்லையில் உள்ள லைலாப்பூர் பகுதிக்கு செல்ல அஸ்ஸாம் முதலமைச்சர் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பியூஷ் ஹசாரிகாவை பணித்ததில், அவர் அவ்விடம் விரைந்து சென்றுள்ளார்.
பிரச்னை என்ன?
மிசோரம் தரப்பைச் சேர்ந்த சில குற்றவாளிகள் அஸ்ஸாமின் அதிகார எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிப்பதைத் தடுக்க அஸ்ஸாம் தரப்பைச் சேர்ந்த ஒரு காவல் துறை குழு இன்று அவ்விடம் சென்றபோது இந்த வன்முறை சம்பவம் நடந்தது.
இருப்பினும், குச்சிகள், கற்கள் மற்றும் துணியால் ஆயுதம் ஏந்திய ஒரு குழு அஸ்ஸாம் காவல் துறை குழுவைத் தாக்கியது. இதையடுத்து கூட்டத்தை கலைக்க துப்பாக்கிச் சூடு நடத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டது.
மறுபுறம், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எல்லையில் உள்ள வைரெங்டே பகுதியில் இருந்து அஸ்ஸாம் மாநில காவல் துறையினரை விலக்குமாறு மிசோரம் முதலமைச்சர் சோரம்தங்கா அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Unlock measure: வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் டெல்லி உயிரியல் பூங்கா திறப்பு