ETV Bharat / bharat

Godavari Express: கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து!

கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தெலங்கானா அருகே தடம் புரண்டதால் குறிப்பிட்ட வழித்தடத்தில் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

Godavari Express: கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டது

author img

By

Published : Feb 15, 2023, 11:34 AM IST

ஹைதராபாத்: வண்டி எண் 12727 கொண்ட கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயில் விசாகப்பட்டினத்தில் இருந்து தெலங்கானா மாநிலத்தில் உள்ள செகந்திராபாத் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் இன்று (பிப்.15) தெலங்கானாவின் மெட்சல் மாவட்டத்தில் உள்ள கட்கேஷர் அருகில் உள்ள அங்குஷாபூரில் 6 ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாக தெற்கு மத்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்த விபத்து நிகழ்ந்த உடன் பயணிகள் பயத்துடனும் பதட்டத்துடனும் இருந்தனர். இதனையடுத்து ரயில்வே உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொள்கின்றனர். இந்த சம்பவத்தால் காஜியாபெத் முதல் செகந்திராபாத் வரையிலான ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. அதேநேரம், தடம் புரண்ட பெட்டிகள் சரிசெய்யப்பட்டு, அதே ரயில் மூலம் அதன் இலக்கை அடையும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்த சம்பவத்தால், செகந்திராபாத் நோக்கி வந்த ரயில்கள் பிபிநகர், புவனகிரி மற்றும் கட்கேஷர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதுதொடர்பாக தெற்கு மத்திய ரயில்வே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “பிபிநகர் - கட்கேஷர் இடையே விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்திராபாத் நோக்கி வந்த கோதாவரி எக்ஸ்பிரஸ் ரயிலின் (12727) எஸ்1 முதல் எஸ்4 வரை, ஒரு முன்பதிவில்லாத பெட்டி மற்றும் ஒரு எஸ்எல்ஆர் என 6 பெட்டிகள் தடம் புரண்டது.

  • Train No.12727 (Visakhapatnam - Secunderabad) Godavari Express got derailed btw Bibinagar - Ghatkesar. *6 coaches derailed:*
    S1 to S4, GS, SLR

    *No casualties/Injuries*

    Passengers are being cleared by the same train by detaching the derailed coaches.

    Helpline No:
    040 27786666 pic.twitter.com/YuBIln1BgK

    — South Central Railway (@SCRailwayIndia) February 15, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்த விபத்தில் எந்த உயிர்சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தடம் புரண்ட பெட்டிகளின் சீரமைப்புக்குப் பிறகு, பயணிகள் தங்களது இலக்கை அடைவார்கள்” என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஹவாலா பணத்துக்கு லஞ்சம் பெற்ற ரயில்வே போலீசார் சஸ்பெண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.