ETV Bharat / bharat

டிசம்பருக்குள் 10 கோடி கரோனா தடுப்பூசி! - அஸ்ட்ராஜெனெகா கரோனா தடுப்பூசி

டெல்லி: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ) அஸ்ட்ராஜெனெகா கரோனா தடுப்பூசியின் உற்பத்தியை அதிகரித்து வருகிறது,

டிசம்பருக்குள் 10 கோடி கரோனா தடுப்பூசி!
டிசம்பருக்குள் 10 கோடி கரோனா தடுப்பூசி!
author img

By

Published : Nov 14, 2020, 10:33 PM IST

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவதில் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னணி மருத்துவ நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில், இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துள்ள அஸ்டராஜெனெகா மருந்து நிறுவனம், கரோனா தடுப்பூசி உருவாக்குவதில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த நிறுவனம் டிசம்பர் மாதத்திற்குள் 10 கோடி டோஸ் தடுப்பூசியை தயார் செய்யும் நோக்கில் செயல்பட்டுவருகிறது.

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி வைரஸிலிருந்து சிறந்த பாதுகாப்பை அளிக்கிறது என்பதை இறுதி கட்ட சோதனையின் தரவுகளில் தெரியவந்தால், குறைந்தது 10 கோடி தடுப்பூசி டோஸ்களை உற்பத்தி செய்ய சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் முடிவுசெய்துள்ளது. டிசம்பர் மாதத்திற்குள் மத்திய அரசிடமிருந்து அவசர அங்கீகாரத்தைப் பெறக்கூடும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா(எஸ்ஐஐ) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பூனவல்லா தெரிவித்துள்ளார்.

எஸ்ஐஐ, கடந்த இரண்டு மாதங்களில் இதுவரை நான்கு கோடி டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, மேலும் நோவாவாக்ஸின் மருந்து உற்பத்தியை விரைவில் தொடங்கயுள்ளது. காவி மற்றும் கேட்ஸ் அறக்கட்டளை "மலிவு விலையில் தடுப்பூசி வழங்கலை உறுதிப்படுத்த விரும்புகின்றன" என்று பூனவல்லா கூறினார்.

பூனவல்லா நிறுவனம் இந்தியாவுக்குள் பயன்படுத்தும் தடுப்பூசிகளில் பாதியை விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே சுமார் 20 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி தயார் செய்துள்ளது. அடுத்த நான்கு மாதங்களில் அந்த தொகையை விட 10 மடங்கு தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021ஆம் ஆண்டில், ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ஒரு புதிய கரோனா வைரஸ் தடுப்பூசி பொது பயன்பாட்டிற்கு உரிமம் பெறும் என்று பூனவல்லா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.