ETV Bharat / bharat

பழங்குடி மீது சிறுநீர் கழித்த விவகாரம்: பாதிக்கப்பட்டோரின் இல்லம் சென்ற தலைவர்கள் - மாஜி அமைச்சர் தர்ணா! - பழங்குடியின இளைஞர்

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில், பழங்குடியினருக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்து காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

Sidhi urination video: Cong, BJP leaders reach victim house, ex-Cong minister resorts to sit-in dharna
சிதி விவகாரம்: பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு கட்சி தலவர்கள் வருகை - மாஜி அமைச்சர் தர்ணா போராட்டம்!
author img

By

Published : Jul 6, 2023, 11:53 AM IST

சிதி: மத்தியப் பிரதேச மாநிலத்தில், விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிதி மாவட்டத்தில், பழங்குடியின இளைஞர் மீது, பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரம், அங்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு, ஆளும் பாஜக தலைவர்களும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினரும் சென்று உள்ளதால், இந்த விவகாரத்தில் ஆட்டக்களம் சூடு பிடித்து உள்ளது. இந்த விவகாரத்தில், பாஜக மீது பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளை வீசி வரும் நிலையில், இந்த விவகாரத்தை, காங்கிரஸ் கட்சி, தனக்கு சாதகமாகப் பயன்படுத்த துவங்கி உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் பிராமண சமூகத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆவார். கடந்த ஜூலை 4ஆம் தேதி, கோல் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரான தஷ்மத் ராவத் என்ற நபர் மீது, சிறுநீர் கழித்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வைரலானதை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்திய தண்டனைச் சட்டம் 294 மற்றும் 504 மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989-ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், பிரவேஷ் சுக்லாவை, போலீசார் கைது செய்தனர்.

குற்றம் சாட்டப்பட்ட பர்வேஷ் சுக்லாவின் தந்தையும், சிதி தொகுதி பாஜக எம்எல்ஏவுமான கேதார் நாத் சுக்லா, காங்கிரஸ் கட்சி, தன் மகனை குறிவைத்து பழிவாங்கி வருவதாக குறிப்பிட்டு உள்ளார். தன் மகனுக்கு எதிராகப் புகார் தெரிவிக்க, ராவத் நிர்பந்திக்கப்பட்டதாக, அவர் குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்த புகாருக்கான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து இட தான் நிர்பந்திக்கப்பட்டதாக, போலீசிடம் ராவத் தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரின் வீட்டிற்கு, பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள், படையெடுத்த வண்ணம் உள்ளனர். அப்பகுதியின் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கமலேஷ்வர் படேல், கரோடி பகுதியின் பாதிக்கப்பட்ட கிராமத்தில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா தனது கட்சி தொண்டர்களுடன் ராவத்தின் வீட்டிற்கு வருகை தந்தார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அஜய் சிங் ராகுல் மற்றும் காங்கிரஸ் மாவட்ட தலைவர் கியான் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு சென்று ஆதரவு தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு, அரசியல் கட்சிகள் தொடர்ந்து படையெடுத்து வருவதால், அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், பூதாகரமாக வெடிக்க வாய்ப்பு உள்ளதாக, போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள கமலேஸ்வர் படேல் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: Tis Hazari: திஸ் ஹசாரி துப்பாக்கிச்சூடு சம்பவம் - வழக்கறிஞரின் உரிமம் ரத்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.