பிரோசாபாத்: ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் பவன் குமார் குப்தா. இவரது மூன்று வயது குழந்தை கிருஷ்ண கார்த்திகேயா. குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து குழந்தை பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தைக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனால், சிறிது நேரத்தில் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், அவர் டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பவன்குமார் தனது மனைவி நீலு தேவி மற்றும் தந்தை சாஹுலால் ஆகியோருடன் குழந்தையை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டது.
மேலும், அவர்களுடன் ஒரு மருத்துவரும் பணியமர்த்தப்பட்டார். தொடர்ந்து குழந்தைக்குத் தேவையான ஆக்சிஜன், வெண்டிலேட்டருடன் மருத்துவக் கண்காணிப்பில் குழந்தை கொண்டுசெல்லப்பட்டது. ஆனால், குழந்தை ரயிலிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து, துண்ட்லா ரயில் நிலையத்தில் ரயில் அவசரமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அங்குச் சென்ற ரயில்வே காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டு உரற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மருத்துவக் குழுவினரின் அலட்சியம் காரணமாகவே குழந்தை இறந்ததாகப் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவக் குழுவினரால் ஆக்சிஜன் ஏற்பாடு செய்ய முடியாமல் குழந்தை உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், மருத்துவக் குழுவின் உபகரணங்கள், வென்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டர் ஆகியவற்றைக் காவல் துறையினர் சீல் வைத்துள்ளனர். குழந்தையின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் இரண்டுமே மோசமான நிலையிலிருந்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து, இந்த வழக்கில் மருத்துவக் குழுவினரின் அலட்சியம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: வாகன தனிக்கை என்ற பெயரில் லஞ்சம் பெற்ற காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!