டெல்லியில் 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா வழக்கில் ஆப்தாப் அமின் பூனாவாலா கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடந்துவருகிறது. அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை, பாலிகிராஃபிக் சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அந்த வகையில், ஆப்தாப் அமினுக்கு பாலிகிராஃபிக் சோதனை நடத்த போலீசார் டெல்லியின் ரோகினியில் உள்ள தடய அறிவியல் ஆய்வகத்திற்கு வாகனத்தில் ஏற்றி பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர். இந்த சோதனை முடிந்த பின் ஆப்தாப் அமினை மீண்டும் சிறைக்கு அழைத்துசெல்ல போலீசார் முற்பட்டனர்.
அப்போது 2 பேர் பட்டாக் கத்திகளுடன் வாகனத்தை வழிமறித்து ஆப்தாப் அமினை வெளியே வர சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தினர். அந்த நேரத்தில், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டி பட்டாகத்திகளை பறிமுதல் செய்தனர். அதன்பின் வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இந்த சம்பவம் இன்று (நவம்பர் 28) மாலை 6.45 மணியளவில் நடந்துள்ளது. இந்த பட்டாக்கத்தி மிரட்டலுக்கு இந்து சேனா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அவர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: கணவனின் உடல் பாகங்களை வெட்டி முட்புதரில் வீசிய மனைவி