போபால் : மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பாஜக பிரமுகர் என்று அந்த வீடியோவை தன் ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதிவிட்டு உள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோவை பகிர்ந்து உள்ளார். மேலும், அந்த பதிவில், "பழங்குடியின மக்களின் நலன் குறித்து பொய்யாக பேசும் பாஜக தலைவர்கள், ஏழை பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று நடந்து கொள்வதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் பதிவிட்டு உள்ளார்.
மேலும் வீடியோவை மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு டேக் செய்த அவர், இதுதான் பழங்குடியின மக்கள் மீது நீங்கள் கொண்டு உள்ள நலனா? ஏன் அந்த பாஜக தவைவர் இன்னும் கைது செய்யப்படவில்லை? என்றும் பதிவிட்டு உள்ளார். பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பர்வேஷ் சுக்லா என்றும், பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பாஜக மூத்த தலைவர்களுடன் இருக்கும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இருப்பதாக அப்பாஸ் ஹபீஸ் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்து உள்ளார். மேலும் பாஜக மூத்த தலைவர்களுடன் பர்வேஷ் சுக்லா இருக்கும் புகைப்படங்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் வெளியிட்டு உள்ளார்.
பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்ததாக குற்றஞ்சாட்டப்படும் நபர் பர்வேஷ் சுக்லா என்றும் அவர் பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்றும் கூறப்படுகிறது. டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ நரேஷ் பல்யானும் இந்த வீடியோவை தன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.
சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வேகமாக பரவிய நிலையில், நெட்டிசன்கள் கணடனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க : "பயங்கரவாதம் குறித்து இரட்டை பேச்சு.." பாக். பிரதமரின் வாயை அடைத்த பிரதமர் மோடி!