ETV Bharat / bharat

மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை!

author img

By

Published : Jul 27, 2023, 7:28 PM IST

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே பள்ளி மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு, மங்களூரு மாவட்ட கூடுதல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

மங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் குலை பகுதியைச் சேர்ந்தவர் பிரித்விராஜ் (33). இவர், பள்ளி மாணவன் ஒருவரைத் தனது வீட்டிற்கு அழைத்து பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், இதனை வெளியில் கூறினால் தேர்வு மதிப்பெண்களைக் குறைத்துவிடுவதாகக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் செய்வதறியாது இருந்த மாணவர் யாரிடமும் கூறாமல் இருந்திருக்கிறார். தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டு ஆக.1 ஆம் தேதி முதல் 2016ஆம் ஆண்டு செப்.6ஆம் தேதி வரை இச்சம்பவம் நடந்து வந்துள்ளது.

ஒரு கட்டத்தில் மாணவருக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்ட நிலையில் நடந்த சம்பவங்களைத் தனது பெற்றோர், குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். உடனடியாக மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நடந்த விவகாரத்தை மருத்துவரிடம் கூறிய நிலையில் அதற்கேற்ப சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்தனர்.

இதையும் படிங்க: திருமண விழாக்களில் சினிமா பாடல்கள் ஒலிபரப்ப காப்புரிமை பிரச்சினையா? மத்திய அரசின் சூப்பர் விளக்கம்!

தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து சுரத்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் ஆய்வாளர் செலுவராஜ், விசாரணையைத் தொடங்கினார். தொடர்ந்து, மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பிரித்விராஜை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இச்சம்பவம் குறித்த வழக்கு நீதிபதி மஞ்சுளா அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதில், அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் சஹானா தேவி வாதிட்டார். பின்னர், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி மஞ்சுளா தீர்ப்பளித்தார். மேலும், இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. இந்திய தேசிய லீக் கட்சியின் முன்னாள் நிர்வாகி கைது!

தண்டனை விதிக்கப்பட்ட ஆசிரியர் அபராதத் தொகை கட்ட தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மாணவன் தரப்புக்கு கர்நாடக அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கலாஷேத்ரா பாலியல் புகார் விவகாரம்; 250 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.