படாபரா: சத்தீஸ்கர் மாநிலம் படபாராவில் இன்று (பிப்.24) அதிவேகமாக சென்ற பிக்அப் வாகனம் லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் உயிரிழந்தனர். 3 படுகாயமடைந்தனர். இந்த விபத்து நள்ளிரவில் கமாரியா அருகே பலோடா பஜார் சாலையில் நடந்துள்ளது. இதுகுறித்து சக வாகனவோட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த தகவலின் அடைப்படையில், சம்பவயிடத்துக்கு விரைந்த போலீசார் உடல்களை மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் தரப்பில், அர்ஜூனி கிராமத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 14 பேர் கிலோரா கிராமத்தில் நடந்த விழாவில் கலந்துகொள்ள பிக்அப் வாகனத்தில் சென்றுள்ளனர்.
இந்த விழா முடிந்த உடன் நள்ளிரவில் அர்ஜூனி கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பலோடா பஜார் சாலை அருகே வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிரோ வந்துகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர் மாநில அரசிடம் வலியுறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.
இதையும் படிங்க: லாரி - கார் மோதி விபத்து: 5 பேர் பலி; நால்வர் படுகாயம்