ETV Bharat / bharat

படகு விபத்தில் மாயமான 17 பேரை தேடும் பணி தீவிரம் - உத்தரப் பிரதேச படகு விபத்தில் மாயமான 17 பேரை தேடும் பணி

உத்தரப் பிரதேச மாநிலம் யமுனை ஆற்றில் மூழ்கிய 17 பேரை தேடும் பணியில் மாநில பேரிடர் மீட்பு குழு ஈடுபட்டுள்ளது

Several missing in Yamuna river on Banda boat tragedy

author img

By

Published : Aug 12, 2022, 6:30 PM IST

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தின் மரக்கா பகுதியில் யமுனை ஆற்றில் சென்றுகொண்டிருந்த மோட்டார் படகு நேற்று (ஆகஸ்ட் 11) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் 45 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களில் 15 பேர் நீந்தி பாதுகாப்பாக கரையேறினர். 9 பேரை மாநில பேரிடர் மீட்புக்குழு மீட்டுள்ளது. அதேவேளையில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

ஆகவே மீதமுள்ள 17 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தேசிய பேரிடர் மீட்புக்குழுவும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த படகு ஃபதேபூர் மாவட்டத்தில் உள்ள அசோக் கால்வாய் பகுதியிலிருந்து பண்டா மாவட்டம் நோக்கி புறப்பட்டதாகும். இந்த விபத்து வலுவான நீரோட்டம் காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட ஏடிஎம் இயந்திரம் - ரூ. 24 லட்சம் மாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.