குருகிராம் (ஹரியானா): நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள் என உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லி, என்சிஆர் பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலால் பல்வேறு வகையான பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பறவைகள் ஹரியானாவின் குருகிராமில் உள்ள பறவைகள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பறவைகள் மருத்துவமனை மருத்துவர் ராஜ்குமார் கூறுகையில், 'கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட பறவைகள் இங்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏப்ரல் கடைசி வாரத்தில் இருந்து சிகிச்சைக்காக கொண்டுவரப்படும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுவரை 198 பறவைகள் பாதிக்கப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.
டெல்லி மற்றும் வடமாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் கொளுத்துகிறது.
இதையும் படிங்க: வண்டலூர் உயிரியல் பூங்காவில் செயற்கை மழை - கோடை வெப்பத்தைத் தணிக்க புதிய முயற்சி