ஹூப்ளி: கர்நாடகா மாநிலம் ஹூப்ளியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர்களாக கரிப் நவாஸ், தில்வார் ஆகியோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி ரூபாய் பணம் வென்றதாக கூறப்படுகிறது. அந்த பணத்தை நண்பர்களுடன் சேர்ந்து செலவழித்துள்ளனர்.
இந்த பணத்தை மொத்தமாக வைத்திருப்பது ஆபத்து எனக்கூறி குறிப்பிட்ட அளவு தொகையை தில்வார், கரீப் நவாசின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியதாக தெரிகிறது. இதை அறிந்த கரீப் நவாசின் நண்பர்கள், அவரை கடத்தியுள்ளனர். பிறகு கரிப் நவாசின் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து, ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டுள்ளனர். அவர் தர மறுத்ததால், 15 லட்சம் ரூபாய் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கரிப் நவாசை கொல்லப்போவதாகக் கூறி மிரட்டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த கரிப்பின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 6ஆம் தேதி புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், கரிப் நவாசை கடத்திய அவரது நண்பர்கள் ஏழு பேரை நேற்று(ஆகஸ்ட் 9) பெலகாவி அருகே போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க:வயலில் களை எடுக்கும்போது கிடைத்த வைரம் - விவசாயிக்கு அடித்த யோகம்!