மகாராஷ்டிரா மாநிலத்தில் வர்தா-யவாத்மால் சாலையில் நேற்றிரவு மஹிந்திரா 500 கார் விபத்துக்குள்ளானது. டியோலியிலிருந்து வர்தா நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த போது இந்த காரின் கட்டுப்பாட்டை ஓட்டுநர் இழந்துள்ளார்.
மேம்பாலத்திலிருந்து கார் விழுந்து விபத்துக்குள்ளானதில், வாகனத்தில் பயணம் செய்த ஏழு பேர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இவர்களை அடையாளம் கண்டனர்.
அப்போதுதான் இவர்கள் ஏழுபேரும் மருத்துவ மாணவர்கள் எனவும், அதில் ஒருவர் பாஜக எம்.எல்.ஏ. விஜய் ரஹங்தாலே என்பவரின் மகன் அவிஷ்கார் என்பதும் தெரியவந்தது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்.
இதையும் படிங்க: Omicron BA-2 உருமாறிய வைரஸ்: இந்தூரில் குழந்தைகள் உள்பட 16 பேருக்கு பாதிப்பு