டெல்லி : தேசிய புலனாய்வு முகமையின் புதிய தலைவராக தினகர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1987ஆம் ஆண்டு பஞ்சாப் கேடர் அதிகாரி ஆவார். 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை, என்ஐஏவின் தலைவராக குப்தாவை நியமிக்க அமைச்சரவையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் உள்துறை அமைச்சகத்தின் சிறப்பு செயலாளராக (உள்நாட்டு பாதுகாப்பு) ஸ்வாகர் தாஸ் நியமிக்கப்பட்டார். சத்தீஸ்கர் கேடரின் 1987-பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான தாஸ், தற்போது உளவுத்துறை பணியகத்தில் சிறப்பு இயக்குநராக உள்ளார்.
2024 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வரை தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார், அதுவே அவரது ஓய்வுபெறும் நாளாகும்.