ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை, உலகம் முழுவதும் உள்ள பெண்கள் கோலாகலமாக கொண்டாடிவருகின்றனர். இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, வீரமங்கை ஒருவரை உதவி துணை ஆணையர் பதவியில் அமர்த்த நொய்டா காவல் துறை முடிவுசெய்துள்ளது.
இதுகுறித்து நொய்டா காவல் துறை துணை ஆணையர் பிருந்தா சுக்லா கூறுகையில், "பெண்கள் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான ஐடியாக்களை பொதுமக்கள் அனுப்ப வேண்டும். ஆண்கள், பெண்கள் என இருவரும் தாரளமாக அனுப்பலாம். முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு முறையே ரூபாய் ஐந்தாயிரம், மூவாயிரம், இரண்டாயிரம் என ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும். மேலும், சிறந்த ஐடியா அளித்த பெண்ணை, உதவி துணை ஆணையர் பதவியில் ஒரு நாள் அமர வைக்க திட்டமிட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.
ஐடியாக்களை "dcp-polws.gb@up.gov.in" என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 9870395200 என்ற எண்ணிற்கு வாட்ஸ்அப் மூலமாகவோ மார்ச் 7ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதேப்போல, ஐடியா அனுப்பும்போது அந்த நபரின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண்களை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றும் அலுவலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: கேரளாவில் கடல் சீற்றம்.. ஆழ்கடலில் தத்தளித்த மீனவர்கள் மீட்பு!