புதுச்சேரியில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினராகவுள்ள கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் அக்டோபர் மாதத்துடன் நிறைவடைகிறது. புதிய உறுப்பினரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் புதுச்சேரி பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி சார்பில் பாஜகவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த 22ஆம் தேதி பாஜக சார்பில் நியமன சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் செல்வகணபதி மனு தாக்கல்செய்திருந்தார்.
இந்நிலையில் நேற்று (செப். 27) புதுச்சேரி மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியின்றி வெற்றிபெற்ற பாஜக வேட்பாளர் செல்வகணபதிக்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் வெற்றிபெற்றதற்கான சான்றிதழை வழங்கினார்.
அவருடன் முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். முதலமைச்சர் ரங்கசாமி, எம்பி செல்வகணபதிக்குச் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மாநிலங்களவை உறுப்பினராக எல். முருகன் போட்டியின்றித் தேர்வு