மத்தியபிரதேசம்: புர்கான்பூரை சேர்ந்தவர் ஆனந்த் சோக்ஸி. இவர் தாஜ் மஹால் போல ஒரு வீட்டை கட்டி தன் மனைவி மஞ்சுளாவிற்கு பரிசளித்துள்ளார். இந்த வீட்டில் மிகப்பெரிய அளவான ஹால், நான்கு படுக்கையறை, ஒரு கிச்சன், ஒரு தியான அறை ஆகியவை உள்ளன.
இந்த வீட்டின் வெளிச்சமானது, தாஜ் மஹால் போல வெளியேயிருந்து வெளிச்சம் வரும்படி வடிவமைத்துள்ளார். இந்த வீட்டை கட்டி முடிக்க மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது.
தன் மனைவிக்கு தாஜ் மஹால் பிடிக்கும் என்பதால் இவர் தாஜ் மஹால் குறித்த பலதகவல்களை சேகரித்து அது போலவே தோற்றமளிக்கும் வகையில் தனது வீட்டை உருவாக்கியுள்ளார். தாஜ்மஹால் போன்ற ஒரு வீட்டைக் கட்டுவதில் பல தடைகள் இருந்தபோதிலும், ஆனந்த் சௌக்சேயின் அசைக்க முடியாத நம்பிக்கையாலும், அவரது சிறந்த தொழில்நுட்பக் குழுவின் கடின உழைப்பாலும் இந்த பிரம்மாண்ட வீடு சாத்தியமாகியுள்ளது.
இந்த தாஜ் மஹால் வீடு செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
இதையும் படிங்க : KIMS: மலக்குடலில் சிக்கிய பைப்: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்