புதுச்சேரி: கரோனா பரவல் காரணமாக பல மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. இதனிடையே கரோனா தொற்று குறைந்ததால் செப்டம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தடுப்பூசி, விழிப்புணர்வு காரணமாக கரோனா பரவல் மேலும் குறைந்துள்ளதால் 1, 3, 5, 7 ஆகிய வகுப்புகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாள்களும், 2, 4, 6, 8 ஆகிய வகுப்புகளுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமை நாள்களும் நவம்பர் 8 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பெற்றோர் சுய விருப்பத்திற்கேற்ப மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாம். வருகைப் பதிவேடு கட்டாயம் இல்லை. பள்ளிகள் திறந்தாலும் ஆன்லைன் மூலம் வகுப்புகளும் தொடர்ந்து நடத்தப்படும். அனைத்து பள்ளிகளும் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட விஜய்!