டெல்லி: பில்கிஸ் பானு கூட்டுப்பாலியல் வன்புணர்வு வழக்கின் குற்றவாளிகள் 11 பேரை கருணை அடிப்படையில் குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. அந்த வகையில், 15 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின் 11 பேரும் சுதந்திர தினத்தன்று விடுதலையாகினர். இந்த விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் இன்று (ஆகஸ்ட் 23) தலைமை நீதிபதி என்வி ரமணா மனுவை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கலவரம் வெடித்தது. அப்போது பில்கிஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணி கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவரது மகள் உட்பட 7 பேர் அவரது கண்முன்னே கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களையே குஜராத் மாநில அரசு விடுதலை செய்துள்ளது.
இதையும் படிங்க: சிறுமியை கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த இருவர் கைது... 4 பேருக்கு போலீஸ் வலை...