பாஜக பெண் அமைச்சர் குறித்து மத்தியப் பிரசேத முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக்க கூறி அவருக்கு அளிக்கப்பட்ட நட்சத்திர பரப்புரையாளர் அந்தஸ்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இதனை எதிர்த்து கமல் நாத் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்தது.
மத்தியப் பிரதேச இடைத்தேர்தலுக்கான பரப்புரை முடிவடைந்ததாலும் வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளதாலும் கமல்நாத்தின் மனு அவசியமற்றது என தேர்தல் ஆணையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இருப்பினும், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.
பரப்புரை செய்யும் போது மேற்கொள்ளப்படும் உரைகளுக்கு வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும் என கமல்நாத் மனுவில் கோரியிருந்தார். ஜனநாயக தேர்தலில் கருத்து சுதந்திரத்தை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். நட்சத்திர பரப்புரையாளர் பரப்புரை செய்வதற்கான செலுவுகளை அந்தந்த அரசியல் கட்சிகள் ஏற்கும். மற்ற பரப்புரையாளர்களின் செலவுகளை அந்தந்த தொகுதி வேட்பாளர்கள் ஏற்க வேண்டும்.
இதையும் படிங்க: சமாஜ்வாதியை வீழ்த்த பாஜக பக்கம் சாய்கிறாரா மாயாவதி?