ETV Bharat / bharat

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

author img

By

Published : Sep 27, 2022, 6:42 PM IST

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டு வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Etv BharatEWS ஒதுக்கீட்டிற்கு எதிரான மனு - தீர்ப்பை தள்ளி வைத்த உச்ச நீதிமன்றம்

டெல்லி: பொருளாதாரத்தில் பிந்தங்கிய பிரிவினருக்கு (EWS) கல்வி மற்றும் அரசுப் பணிகளில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த எதிர்ப்பு மனுவை விசாரித்தது. கே.கே.வேணுகோபால் மற்றும் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஒதுக்கீடுக்கிற்கு ஆதரவாக வாதிட்டனர்.

இந்த மனுவில் மூத்த வழக்கறிஞர்களான ரவி வர்மா குமார், பி வில்சன், மீனாட்சி அரோரா, சஞ்சய் பரிக், கே எஸ் சவுகான் மற்றும் வழக்கறிஞர் ஷதன் ஃபராசத் உள்ளிட்டோர் இந்த 10 விழுக்காடு ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் சேகர் நபாடே EWS ஒதுக்கீட்டை எதிர்த்து வாதிட்டார். இதுகுறித்து அவரது தரப்பில், பொருளாதார அளவுகோல் ஒதுக்கீட்டை வகைப்படுத்தலுக்கு அடிப்படையாக இருக்க முடியாது. உச்ச நீதிமன்றம் இந்த இட ஒதுக்கீட்டை நிலைநிறுத்த முடிவு செய்தால் இந்திரா சாவ்னி (மண்டல்) தீர்ப்ப்பையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர் தரப்பு பொருளாதரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட இடஒதுக்கீடானது பிற ஒதுக்கீடுகளிலிருந்து வேறுபட்டது என்றும், சமூக ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கான 50 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு EWS ஒதுக்கீட்டால் எந்தவொரு இடையூறும் விளைவிக்காமல் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் திருத்தப்பட்ட விதி அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க:உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் விசாரணை நேரடி ஒளிபரப்பு தொடங்கியது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.