ETV Bharat / bharat

Elephant Arikomban: அரிக்கொம்பன் குறித்த மனுவால் அப்செட் ஆன தலைமை நீதிபதி - வழக்கறிஞருக்கு கண்டனம்!

author img

By

Published : Jul 6, 2023, 4:30 PM IST

அரிக்கொம்பன் யானையின் தற்போதை நிலை குறித்து விவரம் தெரிவிக்கக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் அபராதத்துடன் தள்ளுபடி செய்தது. இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும்படி வலியுறுத்திய மனுதாரரின் வழக்கறிஞரை தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையாக கண்டித்தார்.

arikomban
அரிக்கொம்பன்

டெல்லி: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுற்றித்திரிந்த அரிக்கொம்பன் காட்டு யானை, தமிழக வனப்பகுதி வழியாக தேனி மாவட்டம், கம்பம் நகரத்துக்குள் நுழைந்தது. கம்பம் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த அரிக்கொம்பன் ஒருவரை தாக்கி கொன்றதாகத் தெரிகிறது. மக்களை அச்சுறுத்தி வந்த அரிக்கொம்பனை மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர், கடந்த மாதம், நெல்லை மாவட்டம், களக்காடு - முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கோதையாறு அணைப் பகுதியில் விடுவித்தனர். மேலும், யானையை ரேடியோ காலர் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அரிக்கொம்பன் யானையின் பாதுகாப்பு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், "வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட அரிக்கொம்பன் யானை தற்போது எங்கு இருக்கிறது? எந்த நிலையில் இருக்கிறது? உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க உத்தரவிட வேண்டும். அரிக்கொம்பன் யானையின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் குழு அமைக்கவும் கேரள அரசுக்கு உத்தரவிட வேண்டும்" எனக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று(ஜூலை 6) உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரிக்கொம்பன் யானை தொடர்பான மனுக்களால் தாங்கள் சோர்வடைந்துவிட்டதாகவும், இந்த மனுவை விசாரிக்க முடியாது, தேவைப்பட்டால் கேரள உயர் நீதிமன்றத்திற்குச் செல்லும்படியும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "குறைந்தபட்சம் அரிக்கொம்பன் யானை எங்கு இருக்கிறது? உயிரோடு இருக்கிறதா? இல்லையா? என்பதையாவது தெரிவிக்க வேண்டும்" எனக் கூறினார்.

அப்போது தலைமை நீதிபதி, "யானை எங்கு இருக்கிறது என்பதை நீங்கள் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? ஒரு வன விலங்கு எங்கு இருக்கிறது என்பதைப் பற்றி உங்களுக்கு என்ன பிரச்னை?" என்று கேட்டார்.

அதற்கு வழக்கறிஞர், "அரிக்கொம்பன் எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர். இந்த விஷயத்தில் நீதிமன்றத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று கூறினார். மேலும், தங்களது மனுவை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் வாதிட்டதாகத் தெரிகிறது.

அதற்கு தலைமை நீதிபதி, "நீதிமன்றம் கடுமையாக நடந்து கொள்ளாமல், பண்பாக நடப்பதால் அதனை தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு நீதிமன்றத்தை இயக்க முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்காக 25,000 ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.

முன்னதாக நேற்று, அரிக்கொம்பன் யானையை மீண்டும் கேரளாவில் விடக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையும் படிங்க: எலும்பும் தோலுமாக மெலிந்து காட்சியளிக்கும் அரிசிக் கொம்பன் யானை? - வனத்துறை அதிகாரிகள் சொல்வது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.