ETV Bharat / bharat

பம்பாய் உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றக்கோரிய கோரிக்கை நிராகரிப்பு - மகாராஷ்ட்ரா உயர் நீதிமன்றம்

பம்பாய் உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றக்கோரி அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

பம்பாய் உயர் நீதிமன்றத்தின் பெயரை மாற்றக் கோரிய கோரிக்கை நிராகரிப்ப்

author img

By

Published : Nov 3, 2022, 5:33 PM IST

டெல்லி: பம்பாய் உயர் நீதிமன்றத்தின் பெயரை மகாராஷ்டிரா உயர் நீதிமன்றம் என மாற்றக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. முன்னாள் நீதிபதி அளித்த இந்த மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், விக்ரம் நாத் நிராகரித்தனர்.

இந்த மனு, 26 ஆண்டுகளாக நீதிபதியாக பணியாற்றிய தானேவைச்சேர்ந்த வி.பி.பாட்டீலால் அளிக்கப்பட்டது. மகாராஷ்டிராவின் தனிப்பட்ட கலாசாரம், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக 1960இல் அளிக்கப்பட்ட மகாராஷ்டிரா சட்டங்களின் தழுவல் ஆணையை மேற்கோள்காட்டி, முன்னாள் நீதிபதி பாட்டீல் இந்த கோரிக்கை மனுவை அளித்தார்.

மேலும், பிற மாநிலங்களில் உள்ளவர்களும் தங்களின் மாநிலங்களில் உள்ள நீதிமன்றப்பெயரை மாற்றக்கோர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட பாட்டீல், ‘மகாராஷ்டிரா’ எனும் வார்த்தை மகராஷ்டிரா மாநில மக்களிடையே தனிச்சிறப்பு பெற்ற ஒன்றாகும் என்றும், அந்தப் பெயரிலேயே நீதிமன்றம் இயங்க வேண்டுமென்றும் கூறினார்.

ஆனால், இவரது கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், “இது சட்டத்தை இயற்றுபவர்களுக்கான பிரச்னை. இதை இந்த நீதிமன்றத்திற்கு கொண்டு வர உங்களுக்கு என்ன அடிப்படை உரிமை உள்ளது..?” எனக் கேள்வி எழுப்பி, கோரிக்கை மனுவை நிராகரித்தனர்.

இதையும் படிங்க: குஜராத் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.